
கடந்த 31ஆம் திகதி அதிகளவான அரச ஊழியர்கள் ஓய்வுபெற்றதையடுத்து, பல அரச நிறுவனங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர் பற்றாக்குறையை போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெற்றிடமான பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு சமநிலை அல்லது வெளி ஆட்சேர்ப்பு மூலம் செய்யப்பட வேண்டுமா என்பதை கணக்கிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கு பயிற்சி பெற்றவர்கள் தேவை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பெருந்தொகையான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரச ஊழியர்களை சமப்படுத்த பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)