
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தத்திற்கு இணங்க உறுப்பினர்கள் இதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி என்னை அழைக்காது தனது ஆணைக்குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைத்து சந்தித்ததாக PUCSL தலைவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுவதாக எழுத்துமூலம் எனக்குத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு நான் எதிரானவன், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான அரசியல் அழுத்தங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)