
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
சிறையில் உள்ள சேபால் அமரசிங்க சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவ்வாறான தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என மருத்துவ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகையை அவமதித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)