"இனி மெஸ்ஸி vs எம்பாப்பே" இறுதிவரை போராடிய மொராக்கோ.. அசாத்தியத்தை கண்முன் நிகழ்த்திய பிரான்ஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"இனி மெஸ்ஸி vs எம்பாப்பே" இறுதிவரை போராடிய மொராக்கோ.. அசாத்தியத்தை கண்முன் நிகழ்த்திய பிரான்ஸ்!

இந்த அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாடியது. இந்த போட்டியில் சாம்பியன்ஸ் சாபத்தை அசால்ட்டாக கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்ஸ் களமிறங்கியது. அதேபோல் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற வரலாறோடு மொராக்கோ களமிறங்கியது.

ஆரம்பமே அதிரடி

அதுமட்டுமல்லாமல் இந்த உலகக்கோப்பையில் எதிரணியை ஒரு கூட கோல் அடிக்கவிடாமல் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. இந்த சாதனையை அடித்து துவம்சம் செய்யும் வகையில் பிரான்ஸ் அணி, ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து அசத்தியது. பிரான்ஸ் அணியின் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

அடுத்தடுத்து வாய்ப்புகள்

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் அட்டாக் மேலும் அதிகரித்தது. பெரும்பாலும் பிரான்ஸ் அணி வீரர்களே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனிடையே காரணமாக 17வது நிமிடத்தில் ஜூருட்-க்கு கோல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36வது நிமிடத்தில் செளமேனி அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்-க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் வீணடித்தார்.

முதல் பாதி முடிவு

இதனைத் தொடர்ந்து மொராக்கோ அணி அட்டாக்கில் பாய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் ரைட் விங்கில் மொராக்கோ பாய்ந்த போது, கார்னர் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அதில் கோல் அடிக்க எடுத்த வாய்ப்பு, கடைசி நொடியில் பிரான்ஸ் கோல்கீப்பர் லூரிஸ் தடுத்தார். தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.

மொராக்கோ அட்டாக்

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் ரசிகர்களின் கரகோஷத்தோடு மொராக்கோ அணி களமிறங்கியது. இரண்டாம் பாதி தொடங்கிய நிமிடம் முதலே, மொராக்கோ அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் மொராக்கோ அணிக்கு கோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக 79வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 வீரர்களுக்கு நடுவே கொடுத்த மேஜிக்கல் பாஸை, இளம் வீரர் முவானி கோல் அடித்தார்.

பிரான்ஸ் 2வது கோல்

இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் மொராக்கோ அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இருப்பினும் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மொராக்கோ அணி பந்தை கோல் லைனில் வரை எடுத்து சென்று, பிரான்ஸ் அணி தடுத்து நிறுத்தியது. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

பிரேசிலுக்கு பின் பிரான்ஸ்

இந்த வெற்றியின் மூலம் ஃபிஃபா உலகக்க்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது. கடைசியாக 1958ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பிரேசில் அணி வெற்றிபெற்ற பின், 1962ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை பிரான்ஸ் படைத்துள்ளது.

அர்ஜென்டினா vs பிரான்ஸ்

இறுதிப்போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி விளையாட உள்ளது. நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே நேரடியாக மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரும் 18ம் திகதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.