
பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் போக்குவரத்துச் சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கோ அல்லது அமைச்சின் செயலாளருக்கோ அறிவிக்காமல் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'பார்க் அன்ட் ரைட் சிட்டி' பஸ் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் மக்களுக்கான இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)