
இதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தமக்கு கோவிட் தொற்று இல்லை என்பதை சமர்ப்பிக்க PCR பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்கும் சட்டம் இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளைப் பெற்றதற்கான சான்றிதழும் இன்றிலிருந்து கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)