"ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே" வீட்டுக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்கள்.. அரையிறுதியில் பிரான்ஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே" வீட்டுக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்கள்.. அரையிறுதியில் பிரான்ஸ்!

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியுள்ளது.

பிரான்ஸ் - இங்கிலாந்து

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்டம் தொடங்கியது முதலே பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பக்கம் பிரான்ஸ் அணி வீரர்கள் அட்டாக் செய்ய, அதனை இங்கிலாந்து வீரர்கள் அசால்ட்டாக நின்று தடுத்தனர். இங்கிலாந்து அணி வீரர்களின் நிதானமும், பிரான்ஸ் அணியின் அட்டாக்கும் சரியாக போட்டியாக இருந்தது. இதனால் யார் முதலில் கோல் அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

பிரான்ஸ் முதல் கோல்

அதேபோல் பிரான்ஸ் அணியின் நட்சத்திரமான எம்பாப்பே-வை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணி சரியான திட்டத்துடன் களமிறங்கியது. பெரும்பாலும் எம்பாப்பே கால்களுக்கு பந்து செல்லாமல் இங்கிலாந்து வீரர்கள் பார்த்து கொண்டனர். ஆனால் 17வது நிமிடத்தில் எம்பாப்பே உருவாக்கி கொடுத்த கோல் வாய்ப்பில், பிரான்ஸ் அணியின் சவ்மேனி கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் மூலம் முதல் அடியை பிரான்ஸ் அணி அடித்தது. இதற்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க, அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

இங்கிலாந்து கோல்

ஆனால் இங்கிலாந்து அணியின் முயற்சிகளை பிரான்ஸ் வீரர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டே இருந்தனர். இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் பிரான்ஸ் அணியின் 1-0 என்ற முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதி தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர்களின் அட்டாக் அடுத்த கட்டத்திற்கு சென்றது. இந்த நிலையில் 54வது நிமிடத்தில் சவ்மேனி சாகாவை பாக்ஸிற்குள் ஃபவுல் செய்ய, இங்கிலாந்து அணிக்கு பென்லாடி வாய்ப்பு கிடைத்தது. அதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் கோல் அடித்து அசத்தினார்.

தவறிய வாய்ப்புகள்

இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஏற்பட்டது. இதனால் பிரான்ஸ் அணி 2வது கோலை அடிக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த அட்டாக், பிரான்ஸ் அணியை அதிர்க்குள்ளாக்கியது. இங்கிலாந்து அணியின் மெக்வயர் அடித்த ஹெட்டர் கோல் போஸ்டில் அடித்து வெளியே சென்றது. இதன் பின்னர் பிரான்ஸ் அணி அட்டாக்கில் பாய, ஜிரூட்டிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜிரூட் அடித்த பந்தை, இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்ஃபோர்ட் தடுத்து நிறுத்தினார்.

இங்கிலாந்து செய்த தவறு

ஆனால் அடுத்த நிமிடமே பிரான்ஸ் அணிக்கு கிடைத்த வாய்ப்பில், மீண்டும் ஹெட்டர் மூலம் ஜிரூட் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் பிரான்ஸ் அணி வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் அணியின் ஹெர்னான்டஸ் ஃபவுல் செய்ய, இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஹாரி கேன் வீணடித்தார்.

பிரான்ஸ் - மொராக்கோ

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வர, கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதன் கடைசி நிமிடத்தில் ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதனை இளம் வீரர் ராஷ்ஃபோர்ட் வீணடித்தார். இதன் பின்னர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதியில் மொராக்கோ அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.