
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவின் பணிப்புரைக்கு அமைவாக இத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கறுவா செடிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முற்றாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவொன்று பெலியத்த பரிமாற்று வளாகத்தில் மரங்களை நடும் முன்னோடித் திட்டத்தில் இணைந்து கொண்டது. (யாழ் நியூஸ்)