
அதன்படி, கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, உரிய அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்யும் சம்பவங்கள் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நாட்களில் இறைச்சி உண்பதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட முத்திரையுடன் கூடிய இறைச்சியை மாத்திரமே நுகர்வோர் கொள்வனவு செய்ய வேண்டுமென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)