மீண்டும் மீண்டும் மேஜிக்.. 6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. சாதித்து காட்டிய மெஸ்ஸி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் மீண்டும் மேஜிக்.. 6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. சாதித்து காட்டிய மெஸ்ஸி!

அதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. ஒரு பக்கம் லயோனல் மெஸ்ஸி, இன்னொரு பக்கம் லூகா மோட்ரிச் இருந்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பெனால்டி வாய்ப்பு

முக்கியமான ஆட்டம் என்பதால், ஒரு அணிகளுமே தொடக்கம் முதல் எச்சரிக்கையாக விளையாடினர். ஒவ்வொரு முறையும் எதிரணி கோல் போஸ்ட் பக்கம் பந்து கொண்டு சென்ற போதும், தடுப்பாட்ட வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா வீரர் ஆல்வரஸ் தனது வேகத்தை பயன்படுத்தி பந்தை கோல் அடிக்க எடுத்து சென்றார். ஆனால் குரோஷியா கோல்கீப்பர் செய்த தவறு காரணமாக கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

மெஸ்ஸி கோல்

இந்த பெனால்டியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடிக்க தயாரானார். ஆனால் பெனால்டி வாய்ப்புகளில் மெஸ்ஸி சொதப்பி இருப்பதால், அந்த அணியின் கோல்கீப்பரான மார்டினஸ் கூட பார்க்க முடியாமல் திரும்பி நின்றிருந்தார். ஆனால் மெஸ்ஸி எதையும் பற்றியும் கவலைப்படாமல் கோல் போஸ்டின் டாப் கார்னருக்கும் வேகமாக பந்தை தள்ளினார்.

சாதனை நாயகன்

இதனை தடுக்க குரோஷியா கோல்கீப்பர் லிவாகோவிச்சுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த கோல் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதேபோல் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.

அர்ஜென்டினா முன்னிலை

இந்த கோல் அடித்த அடுத்த சில நிமிடங்களில் கவுண்டர் அட்டாக்கில் பாய்ந்து தனி ஆளாக ஆல்வரஸ் அசாத்தியமான இரண்டாவது கோல் விளாசினார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இது குரோஷியா வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

மெஸ்ஸி மேஜிக்

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்த்தில் குரோஷியா அணி தொடக்கம் முதலே கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர்களும், கோல்கீப்பர் மார்ட்டினஸும் தடுத்து கொண்டே இருந்தனர். இதனிடையே 69வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, குரோஷியா அணியின் கார்டியோல், சோசா உள்ளிட்ட 3 வீரர்களை டிரிபிள் செய்து கொடுத்த பாஸை, மீண்டும் ஆல்வரஸ் கோல் அடித்து அசத்தினார்.

அர்ஜென்டினா வெற்றி

இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இதன் பின்னர் குரோஷியா அணி வீரர்கள் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

1990 உலகக்கோப்பை

1990ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கேமரூன் அணி தோல்வியடைந்த அர்ஜென்டினா அணி, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேபோல் நடப்பு உலகக்கோப்பையில் சவுதி அரேபியா அணியிடம் முதல் போட்டியில் தோல்வியடைந்த அர்ஜென்டினா, மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக அர்ஜென்டினா அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.