விமான நிலையத்தில் 40 கோடி பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய ஐவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான நிலையத்தில் 40 கோடி பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய ஐவர்!


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில் இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல் இன்று (09) முறியடிக்கப்பட்டுள்ளது.


40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். 


கைப்பற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த தங்கம் ஜெல் போன்று தயாரிக்கப்பட்டு உள்ளாடைகளில் மறைத்துவைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. 24 கரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் நிறைவு செய்யப்படாத வகையில் கைகள், கழுத்துகளில் அணிந்தும் இவர்கள் எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.