கண்டி, மடவளை, ஹில் கன்றி சர்வதேச பாடசாலையில் தமிழ் சிங்கள சங்கம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த 'කලා வசந்தம்' விழா (PHOTOS)!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, மடவளை, ஹில் கன்றி சர்வதேச பாடசாலையில் தமிழ் சிங்கள சங்கம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த 'කලා வசந்தம்' விழா (PHOTOS)!

கண்டி, மடவளை, ஹில் கன்றி சர்வதேச  பாடசாலையில் தமிழ் சிங்கள சங்கம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த 'කලා வசந்தம்' கடந்த மாதம் 22ம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

இக்கலைவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிரதம அதிதிகளான , ஓய்வு பெற்ற பேராதனை ஆசிரிய கலாசாலை பேராசிரியர் திருமதி. பானுமதி செல்வநாயகம் அவர்களும் ரிசிகலா அழகியல் பாடசாலையின் அதிபர். திருமதி. உதயங்கனி நீலிந்திரா அவர்களும், கெளரவ அதிதிகளான வலயக்கல்வி தமிழ் ஒருங்கிணைப்பாளர் திருமதி. திலக குமாரி மற்றும்

பணிப்பாளர். திரு. ஆர். கே. எம். அமரசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதோடு, மாணவ மாணவிகளின் நடனம் நாடகம் போன்ற கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.