
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிலர், சிரேஷ்ட மாணவர்கள் சிலரினால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாணவர் சங்கங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கபட்டதாக பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.