மீண்டும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற தயாராகும் முஸ்லிம் கட்சிகள் பைஅத்..... யாரிடம் யார் செய்ய வேண்டும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற தயாராகும் முஸ்லிம் கட்சிகள் பைஅத்..... யாரிடம் யார் செய்ய வேண்டும்?

யாழ் நியூசிற்காக பேருவளை ஹில்மி

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்த ஒட்டுமொத்த அநியாயத்திற்கும் முதல் காரணம் 20 ஆம் திருத்த சட்டமூலமாகும். 

ஏற்கனவே இலங்கையில் ஆட்சிக்கு வரும் தனிநபர் ஒருவருக்கு காணப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்களை மீறும் வகையில், இன்னும் மேலதிகமான அதிகாரங்களை வழங்கி, உலகிலேயே அதிகார வெறி தலைவிரித்தாடிய ஆட்சிக்கு முதல் முதல் காரணம், முஸ்லிம் உரிமைகளை பாதுகாப்போம் என தம்பட்டமடித்த முஸ்லிம் காட்சிகளாகும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அளவுக்கதிகமான அதிகாரங்களை தனிநபர் ஒருவருக்கு வழங்க வேண்டாம் என, பல்வேறுபட்ட தரப்பினரும் கூக்குரல் எழுப்பி நேரத்தில், அவை அத்தனையையும் கவனத்தில் கொள்ளாது, பல அரசியல் டீல்களை மேற்கொண்டு ஆதரவளித்தது முஸ்லிம் கட்சிகளாகும்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது அண்மையில் முஸ்லிம் கட்சி ஒன்றின் வேடிக்கையான பைஅத் நிகழ்வு ஒன்று தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

பைஅத் இரு பவகைப்படும்.

ஒன்று ஒரு மனிதன் படைத்த இறைவனுடன் அவனுக்கு மாறு செய்யாமல் தனது படைப்பாளனுடன் செய்யும் பைஅத். 

இரண்டாவது தம்மீது அதிகாரம் செலுத்துவதற்கு அதிகாரம் படைத்த அதிகாரியிடம், அல்லது ஆட்சியாளர்களிடம், அல்லது தம் தலைமைகளிடம் வழங்கும் பைஅதாகும்.

இவ்வாறாக பைஅத் பல இடங்களில் சந்தர்பங்களுக்கு ஏற்றவாறு பல வைகளில் செய்யப்படும்.

ஒருவர் தமது அதிகாரிக்கு வழங்கும் பைஅத் அவரதுஅதிரத்திற்கு மாறு செய்யாமல் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் பைஅதாகும்.

தலைமைகளிடம் வழங்கும் பைதானது ஒரு விசுவாசமான தலைமைக்கு மாறு செய்யாமல் தலைவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பைஅத்தாகும்.

இவ்வாறான பைஅத்கள் இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும் பைஅத் என்பது சிஷ்யர்கள் ஒரு விசுவாசமான தலைவரிடம் தலைமைத்துவத்திற்கு கட்டப்பட்டு நடக்கும் நோக்குக்கில் செய்து கொள்ளப்படும் நம்பிக்கையின் உத்தரவாதமாகும்.

ஆனால் இலங்கை அரசியலைப் பொருத்தவரை, தங்களது சுயலாபங்களுக்காக, மீண்டும் மீண்டும், சிஷ்யர்கள், உற்பட சமூகத்திற்கு மாறு செய்யும் தலைவர், இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றை பிரதி எடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் போலி பையத் நாடகங்கள் சரியானதா ?

கடந்த 20 ஆம் திகதி தாருஸ்ஸலாமில் நடைபெற்ற பைஅத் நிகழ்வில் தலைமையின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க சிஷ்யர்களால் பைஅத் வளங்கப்பட்டது.

இப்பைஅத் முறை சரியானது தானா ?

சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு திருத்தத்தின் போது, பாராளுமன்ற வாக்கெடுப்பில்,

தாம் தம் தலைமையினால் ஏகமானதாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாகவே ஆதரவாக வாக்களித்தோம் எனவும், அனைத்தும் ஏற்னவே பேசப்பட்ட சமாச்சாரங்களுக்கு அமைவாகவே முடிவுகள் எட்டப்பட்டது எனவும், சமூகத்திற்கு தங்கள் தலைமையே மறுசெய்தன எனவும் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டது.

ஆக மொத்தத்தில் சிறுபான்மையினருக்கு அநியாயம் இழைத 20 வது திருத்தம் முஸ்லிம் கட்சி தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது உலகறிந்த ரகசியம்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி நடந்த பைஅத் நிகழ்வை எவ்வாறு வர்ணிப்பது ?

மாறு செய்யும் தலைமைகளின் கீழ், நாம் தலைமைக்கு மாறு செய்ய மாட்டோம் என்ன பைஅத் செய்வது ஒரு வேடிக்கையான விடயமாகும். 

மாறாக, தலைகீழாக, நான் இனி மாறு செய்யமாட்டேன் என்ன தலைமை சிஷ்சயர்களிம் பைஅத் வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மரத்தில் ஏறி முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் காக்க வந்த தலைவரின் வேடிக்கையான பைஅத் நாடகம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுமா ?

( பேருவளை ஹில்மி )

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.