முஸ்லிம் சமூகமே உஷார்! பறிக்கப்படப்போகும் காதி நீதிமன்றம்! ஜமீயதுல் உலமாவும் ஆதரவா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமூகமே உஷார்! பறிக்கப்படப்போகும் காதி நீதிமன்றம்! ஜமீயதுல் உலமாவும் ஆதரவா?


திருத்தப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தின் இறுதி வடிவம் தற்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அது காத்து நிற்கின்றது.

திருத்தப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் அடங்கியிருப்பது என்ன என்பது சம்பந்தமான விடயம் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு மறைக்கப்பட்டே வருகிறது.

நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சர்சை நீண்டகாலமாகவே பேசப்பட்டு வந்தது.

இது சம்பந்தாமாக அப்வப்போது குழுக்கல் அமைக்கப்பட்ட போதிலும்
அதற்கான தீர்மணங்களும்
திருத்தங்களும் முழுமையாக நிறைவு பெறவில்லை.

இவ்வாறான முன்னெடுப்புகளில் முக்கியமான ஒன்றாக 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட குழுவை குறிப்பிலாம் . 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து, சிபாரிசு செய்வதற்காக ஜமீயதுல் உலாமாவின் தலைவர் உற்பட, குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டிருந்தார்.

இக்குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் அங்கம் பெற்றிருந்தனர். இக்குழுவானது 2018 ஆம் அண்டு வரை சுமார் 9 வருடங்கள் தமது பணியை இழுத்தடிப்புச் செய்தது. இறுதியில் இரண்டாக உடைந்த இரு குழுக்களும் இரு அறிக்கைகளை முன்வைத்தது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை விடயத்தில் ப‌ல்வேறு காரணங்களை காட்டி இழுத்தடிப்புச் செய்ததினால் அறிக்கைவிடயத்தில் கருத்தொருமித்த உடன்பாடு எட்டப்படவில்லை. இது உலகறிந்த உண்மை. 

இன்று இவர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும் கால தாமதத்திற்கு 
சரீஆ , மார்கம் போன்றவற்றை இன்று சாட்டாக
வைத்தாலும், நாளை அந்நியர் முன்னிலையில் வாழ்கையின் அந்தரங்க விடயங்கள், வாழ்கை சம்பந்தமான மார்க்க தீர்புக்கள் பெறுவதற்காக, சமூகம் சீரழியும் சாபத்திற்கு தத்தம் பொறுப்புக்களை சரியாக நிறை வேற்றத்தவரிய இவர்களே பொறுப்பாளிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுமார் ஒன்பது வருடங்கள் இழுத்டிப்பு செய்த இ‌க்குழு, ஒன்பது வருடங்களின் பின்பு அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இந்த அறிக்கையை தலைவர் சலீம் மர்சூபிடம் கையளித்தார்.

பின்னர் குழுவின் தலைவர் உற்பட திருத்தக் குழு அக்காலப் பகுதியில் நீதி அமைச்சராக இருந்த தலதா அத்துகோரளவிடம் அறிக்கை கையளித்தது.

உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து 
அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தேவை இவர்களுக்கு இருக்கவில்லை. 

இக்குழுவின் தாமதம் காணமாக ஆங்காங்கே பெண்கள் அமைப்புக்களின் 
குரல்களும் எதிப்பு அலைகளும் தலைதுக்கியது. தக்க சந்தர்ப்பத்தில், சூற்சகமாக தீர்மானங்கள் தலைமைகளால் எட்டப்படாததால், இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திய இனவாதிகள், முஸ்லிம் தனியார் சட்டத்தை திரும்பிப் பார்க வைத்த முதல் மையில் கல் இதுவாகும்.

இறுதியில் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரச்சினைக்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட குழுவே பிரச்சினையின் தீர்வுக்கு ஒரு பிரச்சினையாக மாறியது.

ஒரு குழு இரண்டாகப் பிரிந்து இரு அறிக்கைகளை சமர்ப்பித்தது. இரு அறிக்கைகளைப் பெற்ற அந்நிய மதத்தைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்க அறிவற்ற அமைச்சர் இது விடயத்தில் எந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது என்ற சிக்கலுக்கு ஆளானார்.

இறுதியில் இரு குழுக்களின் பிரச்சினையை ஆராய்ந்து இது விடயத்தில் தனக்கு ஆலோசனை வழங்க அப்போதைய அமைசரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் சந்திராணி பண்டார, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே இரு பெண்கள் அடங்கலாக இன்னொரு குழுவை அமைச்சர் தலதா அதுகோரல நியமித்தார்.

முஸ்லிம் சமூகம் தலைகுனிய வேண்டிய வெற்க்கேடான ஒரு விடயம் இவர்களின் இழுபறி நிலை காரணமாக அமைச்சரினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்ட இக்குழு வாழும் இரு குழுவின் அறிக்கையை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.

தலைவர் சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு,
குறைந்தது ஒன்பது வருடங்களின் பின்னராவது கருத்து ஒருமித்து  
உருப்படியான ஒரு அறிக்கையை கையளிக்காமால் நானா நீயா என்ற வரட்டு கெளரவங்களால் வேறுபட்ட பிரதி பலனையே இன்று காதி நீதிமன்றம் பறிக்கபடுவதற்கு முக்கிய காரணமாகும்.

இறுதியில் ஆற்சி மாற்றத்திற்கான ஒரு பிரச்சாரமாக இனவாதிகளால் முஸ்லிம் தனியார் சட்டத்தை கையில் எடுத்து ஆடும் அளவு‌க்கு, சமூகத்தின் உள்வீட்டு சமாச்சாரத்தை இந்த ஆன்மிக தலைமைகளும் புத்தி ஜீவிகளும் வீதிக்கு கொண்டுவர வைத்தனர். 

அதைத் தொடரந்து ஆட்சிமாற்றம் ஏற்பவே நீதியமைச்சராக பதவியேற்ற அமைச்சர் அலி ஸப்ரி அவர்கள் முஸ்லிம் கலாச்சார பிரிவின் தலைவர் ஸப்ரி ஹலீம்தீன் அவர்களின் தலைமையில் ஒன்பது பேர்களை கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.

இது சம்பந்தமாக ஆராய்ந்த குழு, அமைச்சரிடம் அறிக்கை ஒன்றை கையளித்தாலும் அது சம்பந்தமான விபரங்கள் முழுமையாக சமூகத்தின் பார்வைக்காக வெளியிடப்படவில்லை. இதானால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளும் இனவாதிகளின் மத்தியிலும் மீண்டும் சர்ச்சைகள் தலை தூக்கியது. இவ்வறிக்கையை அமைச்சர் அலி சப்ரி அவர்கள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க முற்பட்டபோது, அப்போது அமைச்சரவையில் அங்கம் வகித்த கடும்போக்கான அமைச்சர்கள் இது விடயத்தில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தங்கள் எதிர்புக்களை வெளியிட்டனர். 

இதை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதியால் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அமைக்கப்பட்டது. இதனால் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை முடிவு வரும் வரை முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில்லை என்ற முடிவை அறிவித்தார்.

இதனால் தற்போது அமைச்சர் அலி ஸப்ரி அவர்களால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு தற்போது நீதி அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷ அவர்களிடம் அறிக்கை கையளித்தது.

ஆனால் இவ்வறிக்கையில் அடங்கியிருக்கும் விடயங்கள் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

உள்ளக தகவலின்படி இது சம்பந்தமான விடயங்களை வெளியிட இக்குழுவுக்கு அதிகாரங்கள் கிடையாது. இறுதியான முடிவை அமைச்சரே அறிவிப்பார்.

அவ்வாறாயின் இவ்வறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு சகல விடயங்களும் நடைபெற்ற பின்னரே அமைச்சர் அறிவிப்பார்.

அதன் பிறகு பறிக்கப்பட்ட உனது உரிமைகளுக்கு பொறுப்புக் கூறுவது யார்.
எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறலாமா ?

உள்ள தகவல்களின் படி திருத்தப்பட வேண்டிய விடயங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயங்களும் இடம் பெற்றுள்ளது.

அறிக்கையை கையளிக்கும் இவ்வைபவத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளரும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ்வாறாயின் இதன் உண்மையான நிலைமை என்ன என்பதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறியாது இருக்கின்றதா ?

அவ்வாறாயின் சுமார் இரு தசாப்தங்களாக சரீஆ சட்டங்களையும் மார்க விடயங்களையும் காரணம் காட்டி இழுத்தடிப்புச் செய்த
ஜம்மியத்துல் உலமா, என் விபரீதங்களை மக்களுக்கு தெளிவு படுத்தாதிருக்கின்றது ?
அவ்வாறில்லாமல் இதன் உண்மையான வடிவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு மூடி மறைப்பது ஏன் ?   

இவ்வறிக்கையில் அடங்கி இருப்பது என்ன?

உள்ள தகவல்களின் படி பின்வரும் விடயங்களும் இடம்பெற்றுள்ளன.

1. பெண்ணுரிமை என்ற அடிப்படையில் மணமகளின் பொறுப்பாளர் (வழி) என்ற கட்டாயமான விடயம் நீக்கப்படல் அல்லது, அவசியமில்லை என முடிவு செய்யப்படல்

2. பெண் காதி நியமிக்க படல்.

3. திருமணத்திற்கான வயதெல்லை நிர்ணயிக்க படல்.

4. இஸ்லாம் அனுமதித்த பலதார திருமண உரிமை இல்லாதொழித்தல்.

5. காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, காதி நீதி மன்றம் 
சமத்த மண்டல போன்று அதிகாரமற்ற சபையாக மாற்றப்பட்டு காதி நீதிமன்றத்திற்கு தற்போது இருக்கும் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும்.

இவை முக்கியமானவை, மேலும் இன்னும் பல மாற்றங்கள்
 
இதில் முக்கியமானவையாக காணப்படுவது மறைமுகமான காதி நீதிமன்ற ஒழிப்பாகும்.

அதாவது காதி நீதி மன்றம் ஒழிக்கப்பட மாட்டது என்ற போர்வையில் அதன் காதி நீதிமன்ற அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட நீதி மன்றங்களுக்கு வழங்கப்படும். கும்ப வாழ்கையில் பிரச்சினைகள் ஏற்படும் போது அது பெயரளவில் உள்ள காதி நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, முடிவுகளகளை எட்ட முடியாத பட்சத்தில் அவை மாவட்ட நீதி மன்றங்களுக்கு மாற்றப்படும். விவாகரத்து போன்ற இறுதியான முடிவுகள் மாவட்ட நீதி மன்றங்களிலையே பெறப்படல் வேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையில், குடும்ப உறவில் வெடிப்பு ஏற்பட்ட ஒரு குடும்பம், கணவனைப் பிரிந்த நிலையில், வருமானம் அற்ற நிலையில், ஓர்இரு பிள்ளைகளின் உணவுக்காக திண்டாடும் நிலையில், நீதிமன்ற செலவுகளுக்காக எங்கே செல்வது . 

எனவே இருக்கும் உரிமையை இழந்து சமூகத்திற்கு இவ்வாறான ஒரு சாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இவர்களின் அறிக்கை சரியானதா ? 

மேலும் கட்டாய வயதெல்லை நிர்ணயிக்கப்படுவதனால், சில குடும்பங்களில் நிர்ணயிக்கப்பட்ட வயதிலையை அடையுமுன் தாய் தகப்பனை இழக்கும் வேறு குடும்பங்களில் தங்கி வாழும் அநாதை பெண் பிள்ளைகளின் நிலை என்ன ?

சுருங்கக்கூறின் மேற் கொள்ளப்போகும் போகும் திருத்தத்தினால் சமூகம் ஏராளமான நடப்பு ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய கவலையான நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்படும் என்பதில் சந்தகமில்லை.

ஓரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வைக்குல் இனவாதிகளின் எதிர்பார்ப்பும் இதுவே. எனவே அவர்களின் எதிபார்ப்பை நிறைவு செய்ய இவர்களா ?

சில காதிகளால் சிலருக்கு அநியாயம் அநீதியும் நடப்பது மறுப்பதற்கில்லை.
இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு நீதி ஆணைக்குழுவின் காதி பிரிவுக்கு அதிகாரங்கள் போதுமானதாக இல்லை.

எனவே அதற்குத் தேவையான அதிகாரங்களை வழங்கி காதி நீதிமன்றங்களை பாதுகாக்காமல் இல்லாது ஒழிப்பதுதான் தீர்வுக்கு வழி முறையா ?

வீட்டுக் கூரையில் எலி இருப்பதற்காக, கூறையை எரிப்பதா ? சூட்சுமமான முறையில் எலிகளை அழிப்பதா ? 

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த இறுதி வடிவம் அன்மையில் இலங்கை ஜமியத்துல் உலமாவின் செயலாளர் முன்னிலையில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அவ்வாறாயின் இதன் திருத்த விபரங்கள் நிச்சயமாக அவர் அறிந்திருக்க வேண்டும். எனவே உண்மையான வடிவம் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது ஏன் ?
தலைமை சார்பாக செயலாளர் ஆஜராகும் போது இது விடயத்தில் தொடர்ந்தும் தலைமை மௌனம் காப்பதும் ஏன்?

அவ்வாறாயின் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தி பிரச்சினையை தீர்த்து முடிவுகான பல சந்தர்பங்கள் அமைந்தும் மார்க்கம் சரீஆ என இழுத்தடிப்பு செய்த ஜம்மியத்துல் உலமா இத் திருத்தற்திற்கு ஒப்புதல் வழங்கியதா ?

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏற்பட்ட சர்சைக்கு முக்கிய காரணம் அகில இலங்கை மீயதுல் உலமா என்பது உலகம் அறிந்த உண்மை.

அவ்வாறாயின் தங்கள் மீதுள்ள குற்றச் சாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள
சமூகத்தை பலிகொடுக்கும் திட்டம் தானா இது ? இதன் மர்மம் தான் என்ன ?

கடந்த காலங்களில் சமூக நலனில் அக்கறை கொள்ளாமல் அரசியல் ஆதிக்கங்ளுக்காகவும், தங்களது பாதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அடிபணிந்து வழங்கிய பத்துவாக்களினால் முஸ்லிம் சமூகம் பட்ட வேதனைகள் மறப்பதற்கில்லை.

எனவே இவர்களால் வழங்கப்படும் தீர்புக்கள், முடிவுகள் சம்மந்தமாக முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

தற்போது திருத்தி முடிவு காணப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக உடனடியாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளும் முக்கியஸ்தர்களும் குரல் எழுப்பி, உரிய அரசியல் தரப்புக்களை தொடர்புகொண்டு திருத்தப்பட இருக்கும் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதை தடுக்க முன்வர வேண்டும்.

சமுதாய வாஞ்சையுடன் வாழும் சில நல்ல உள்ளங்கள் அரசியல் உயர் பீடங்களை சந்தித்து இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே ஏனைய முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் தலைமைகளும் முக்கியஸ்தர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து இது விடயத்தில் துணைபுரிய வேண்டும்.  

இந்த தக்க சந்தர்ப்பத்தில் எமது மார்க்கை உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கத் தவறுவோம் ஆயின் எதிர்காலத்தில் எமது நாட்டில் வாழப்போகும் சந்ததியினர் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

ஒரு நாட்டில் வாழும் எந்த மதத்தைச் சேர்ந்த மக்கள் ஆயினும், அவர்களின் மார்க்க உரிமைகள் சர்வதேச மனித உரிமை சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நாட்டில் நாம் வாழ்வதற்கு, எந்த ஒரு சமூகத்திற்கோ,எந்த ஒரு அரசுக்கோ, அல்லது எவ்வித இனவாத அமைப்புக்களுக்கோ எமது உரிமைகளை லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. 

அரசியல்களுக்காகவும் பதவிகளுக்காகவும் எமது உரிமைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முனைவோர் இந்த நாட்டில் வாழப்போகும் எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.

சிந்திப்போம் செயல்படுவோம் எமது உரிமைகளை பாதுகாப்போம்!

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.