கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
UPDATE: மு. ப 10:40
குறித்த பகுதியில் உள்ள மதுபான விடுதியில் கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எனினும், அந்த நேரத்தில் மதுபான விடுதிக்கு அருகில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்டுள்ளார்.
பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தங்கோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.