பாராளுமன்றத்தில் பேசிய அவர், இது பெரிய மார்ஜின் இல்லாததால், டீசல் விலையை குறைக்க முடியாது. முன்னதாக டீசலுக்கு 30 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, விலை திருத்தத்தின் பின்னரும் 1 ரூபாய் மட்டுமே லாபம் பதிவாகி வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு போதிய பணம் கிடைக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இறக்குமதியின் போது ஏறக்குறைய 70 ரூபா இலாபம் பதிவாகியதால் பெற்றோலின் விலையை குறைக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் விலையில் திருத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)