லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலி!


லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி (LITRO Home Delivery) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்குகிறது.


அந்நிறுவனம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில், மொபைல் செயலியின் மூலம் நுகர்வோர் ஒருவர் எந்த வகையான உள்நாட்டு அல்லது தொழில்துறை எரிவாயு கொள்கலனையும் உலகில் எங்கிருந்தும் பெற முடியும்.


நுகர்வோர் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் LITRO எரிவாயுவை கொள்வனவு செய்யலாம்.


கோரிக்கைகளை மேற்கொண்டு, பணம் செலுத்துவதன் மூலம் அவர்கள் இதனை பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் உடனடியான விநியோகத்தையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது.


மேம்படுத்தப்பட்ட LITRO Gas மொபைல் செயலியின் ஊடாக நுகர்வோர் உலகில் எங்கிருந்தும் தங்களின் கொடுப்பனவை டொலர் மூலம் செலுத்தலாம் .


மொபைல் செயலியை இப்போது iOS மற்றும் Android இல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.