
இதன்படி, பண்டிகைக் காலத்திலும் இந்த விலை நிலை பேணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், திறந்த கணக்கு முறையின் ஊடாக எதிர்வரும் காலத்திற்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டு பெற்றுக் கொள்ளப்படுவதாக நிஹால் சேனவிரத்ன மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)