கிறீன் கார்ட் சீட்டிழுப்பு என்று அனைவராலும் அறியப்படும் 2024 பன்முகத்தன்மை புலம்பெயர்ந்தோர் விசா சீட்டிழுப்பு திட்டம், இன்றிரவு (05) முதல் இணையத்தள விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதகரம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க DV2024 பன்முகத்தன்மை விசா திட்டத்தில் (https://dvprogram.state.gov) மின்னணு மூலம் மாத்திரமே பிரவேசிக்க முடியும். காகித உள்ளீடுகள் அனுமதிக்கப்படாது என்றும் கொழும்பு தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சீட்டிழுப்பு விண்ணப்பக் காலம் அக்டோபர் 05 (இலங்கை நேரப்படி இரவு 9:30) முதல் நவம்பர் 08 (இலங்கை நேரப்படி இரவு 10:30) வரை இருக்கும் என்று கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகம் அறிவித்துள்ளது.