இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை முற்றாக நிராகரிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் குறித்த பிரேரணையில் உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்து கருத்து தெரிவிப்பது இந்த குழுவின் பொறிமுறை அல்லது நிபுணத்துவம் தொடர்பான விடயம் அல்ல என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)