நிலக்கரி பற்றாக்குறையால் ஒக்டோபர் மாதத்தில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் தற்போது அதற்கான தேவை இல்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மின்வெட்டு நீடிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தற்போதைய 2 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டை அடுத்த 2-3 மாதங்களுக்கு பேண முடியும் என அவைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் உற்பத்தி இயந்திரங்கள் திங்கட்கிழமை (03) புனரமைக்கப்பட்டு தேசிய அமைப்பில் சேர்க்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டுவிட்டர் பதிவில், இரண்டாவது நிலக்கரி இருப்பை கையகப்படுத்துவதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டதாக முன்னர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)