கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு கைளிக்கப்பட்டு ஒரு மாதத்தில், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இதற்கமைய தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 320 பேர் பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் முகாமை செய்யும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த மாதத்தில் முழுமையாக 9 கோடி ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.