QR முறையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான செய்தி!
advertise here on top
advertise here on top

QR முறையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான செய்தி!


தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது ஏற்படும் குறுந்தகவல்களுக்கு எரிபொருள் நிலையக் குறியீடு அடுத்த வாரம் முதல் சேர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தேசிய எரிபொருள் பாஸ் QR ஐ சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 


இந்த வாரம் குறிப்பிட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு அதிகரிப்புக்கான சிறப்பு வகை சோதனை செய்யப்படும். 


சுற்றுலா எரிபொருள் அனுமதிச்சீட்டு மற்றும் வாகனம் அல்லாத வகை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கான தானியங்கு அறிக்கைகள் இன்று முதல் கிடைக்கப்பெறும் அதேவேளை, பொதுமக்களுக்கான டேஷ்போர்டும் கிடைக்கப்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்புடன் தேசிய எரிபொருள் கடவு QR முறையை மீளாய்வு செய்வதற்காக இன்று காலை நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து அவர் இதனை அறிவித்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.