புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு! முழு விபரம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு! முழு விபரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்குரிய இராஜாங்க அமைச்சு தொடர்பான விபரங்கள் வருமாறு:

ஜகத் புஷ்ப குமார் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்

லசந்த அழகியவன்ன - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

திலும் அமுனுகம - முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

கனக ஹேரத் - தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

ஜானக வக்கும்புர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்

மொஹா பிரியதர்ஷன் டி சில்வா - விவசாய இராஜாங்க அமைச்சர்

தேனுக விதானகமகே - பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

அருந்திக்க பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட – பிரிவென கல்வி இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்

தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்திக்க அனுருத்த - மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

சனத் நிஷாந்த - நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கம்லத் - பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர்

சாந்த பண்டார - வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத் - நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

சதாசிவம் வியாழேந்திரன் - வரத்தக இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

பியல் நிஷாந்த – மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர்

டி.வி. சானக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள இராஜாங்க அமைச்சர்

டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

அரவிந்த் குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – மகளிரி மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கலாநிதி சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

டயனா கமகே – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்

சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

அனூப பியும் பெஸ்குவெல் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.