உண்டியல் முறையில் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம்; வங்கி கணக்குகள் பரிசோதனை!
advertise here on top
advertise here on top

உண்டியல் முறையில் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம்; வங்கி கணக்குகள் பரிசோதனை!


உண்டியல் அல்லது ஹவாலா ஆகிய சட்டவிரோத முறைகளின் மூலம் இரண்டு மாதங்களில் ஒன்பது கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


நாடு முழுவதிலும் உள்ள உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைமைகள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.


மடகாஸ்கரில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் உண்டியல் கடத்தல்காரர்களால் இந்தப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


இந்த கடத்தல் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதல் தலைமையில் விசேட குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.