காதலியை பார்பதற்கு பஸ் ஒன்றை திருடி ஓட்டிச் சென்ற சிறுவன்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலியை பார்பதற்கு பஸ் ஒன்றை திருடி ஓட்டிச் சென்ற சிறுவன்!!


காதலியை பார்ப்பதற்காக பிலியந்தலை பஸ் டிப்போவில் பஸ்ஸை திருடிய வாலிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மத்தேகொட, சித்தமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பஸ் டிப்போவில் இருந்து இயங்கும் பஸ் சாரதிகள் குழுவொன்று நேற்று இரவு ஆசிய கிண்ண 2022 இன் இறுதிப் போட்டிகளை காண டிப்போவிற்கு வந்திருந்தனர். 

பஸ் டிப்போவில் பஸ்களை நிறுத்திவிட்டு, உணவு வாங்கிக்கொண்டு வேறு இடத்தில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு கிளம்பிய குழுவினர், திரும்பி வந்து பார்த்த போது, தனது பஸ் காணாமல் போனதை உணர்ந்த சாரதி ஒருவர், பிலியந்தலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

விசாரணைகளை ஆரம்பித்த போது, கெஸ்பேவ - பிலியந்தலை சந்திக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் பஸ்ஸை அவதானித்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர் வாகனத்தை கைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக அந்த வாலிபர் தெரிவித்தார். 

நேற்று இரவு 08.00 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய சிறுவன், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்துகள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகக் கூறினார்.

டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பஸ்களையும் கவனமாக பரிசோதித்த அவர், சாவியுடன் இருந்த பஸ் ஒன்றை அவதானித்த சந்தேகநபர், தனது காதலியை பார்ப்பதற்காக மொரகஹஹேனவுக்கு புறப்பட்டார்.

குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் தனது காதலியைப் பார்ப்பதற்காக பேரூந்தொன்றை திருடியதாகவும், ஹோமாகமவுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.