நேற்று (04) இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சமையலறை பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாகவும், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
சத்தத்தின் காரணத்தை ஆராயும் போது, சிறுத்தை தம்மை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவர் காயமின்றி தப்பியதாகவும் அவர் மேலும் கூறினார்.
பின்னர் வீட்டிற்குள் விலங்கு சிக்கிய அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை குடும்பத்தினர் மூடிவிட்டனர்.
அதன் பின்னர் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அவர், விலங்கைப் பாதுகாப்பாகப் பிடித்து தமது காவலில் எடுத்துள்ளனர்.
மேலும் இந்த சிறுத்தை நாய்களை வேட்டையாடும்போது தவறுதலாக வீட்டுக்குள் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. (யாழ் நியூஸ்)