ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அவரது இல்லத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே நேரடியாக பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, தாக்குதல் தொடர்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதாக வலியுறுத்துகின்றார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

இச்சம்பவங்கள் இடம்பெற்ற போது அருகில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களிடம் இருந்து பொலிஸாருக்கோ அல்லது அவர்களது கடமைகளுக்கோ அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டதாக ஆணைக்குழுவின் விசாரணைகள் வெளிப்படுத்தவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட போது தாம் அந்த இடத்தில் இருக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே தெரிவித்தார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே சத்தியப்பிரமாணத்தின் கீழ் வழங்கிய சாட்சியத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகம் உள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி காட்சிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் காட்டியுள்ளதுடன், சம்பவம் பிரேம்களில் காட்டப்பட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 

பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஊடகவியலாளர்களை தெளிவாக அடையாளம் கண்டுள்ள போதிலும் அவர்கள் மீதான தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக உணரப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் சாதாரண கடமைகளுக்காகப் பயன்படுத்தும் காட்டு ஆடைகள் போன்ற சீருடைகள் சிவில் மோதல்களை கட்டுப்படுத்துவதற்கும் சிவில் நடவடிக்கைகளுக்கும் பொருந்தாது எனவும்,  எனவே அவர்களுக்கு மிகவும் பொருத்தமான சீருடையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் பேரவை, பொலிஸ் மா அதிபருக்கு சிபாரிசு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.