திங்கட்கிழமை நள்ளிரவு (08) முதல் எல்.பி எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒரு கோப்பை சாதாரண தேநீர் மற்றும் ஒரு பொதி அரிசியின் விலைகளையும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)