'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' நூல் வெளியீட்டு விழா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' நூல் வெளியீட்டு விழா!


லேக் ஹவுஸ், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி தினகரனில் எழுதிய நேர்காணல் பத்திகளின் தொகுப்பான 'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி பி. ப 2.30 மணிக்கு கொழும்பு - 03 மென்டரினா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொள்ளவுள்ளார்.

வரவேற்புரை, நூல் அறிமுகம்: இர்பான் இக்பால் (சோனகர்.கொம் ஆசிரியர்)
ஆசியுரை : ரி. செந்தில்வேலவர் (பிரதம ஆசிரியர் - தினகரன்)

வாழ்த்துரைகள் :
1. மாத்தளை எம். எம். பீர் முஹம்மது (தலைவர் - மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை)
2. ரவூப் ஹக்கீம் ( தேசிய தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
3. ரிஷாட் பதியுதீன் (தேசிய தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
4. என். எம். அமீன் (முன்னாள் தலைவர் - முஸ்லிம் மீடியா போரம்)

நூல் கருத்துரை :
1. ஏ. எம் நஹியா (முன்னாள் பணிப்பாளர் நாயகம் - புனர்வாழ்வு மீனவர், வீடமைப்பு மீனவர் நலன்)
2. கவிஞர் ரா. நித்தியானந்தன் (முன்ளாள் விரிவுரையாளர் - அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்)

நூலாசிரியர் உரை: இக்பால் அலி
ஏற்புரை: சஹீட் எம். ரிஸ்மி (தேசியத் தலைவர் - அகில இலங்கை YMMA பேரவை)

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் நாட்டின் உயர்ச்சிக்காகவும்  மக்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் மக்கள் நலன் பேணும் துறை சார்ந்த இளம் தலைமைத்துவங்களையும் ஊடகத் துறை சார்ந்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் உள்ளடங்கும்.

எனவே உங்களின் பெறுமதியான கால நேரத்தை ஒதுக்கி இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிக அன்புடன் வேண்டுகின்றோம்.

-ஏற்பாட்டுக் குழு

மூலம்- தினகரன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.