
பிரமாணப் பத்திரம் ஒன்றில் குறிப்பிடுகையில், அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.
தாம் கூறிய கருத்துக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)