
இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த நாட்டு மக்களுக்காக எப்போதும் நான் நிற்பேன் என்பதும் இரகசியமல்ல எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களிடையே நல்லிணக்கத்தையும் பாதுகாத்து, இந்த தாய்நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு செய்யக்கூடிய மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் தியாகங்களுக்கு என்னை ஒருமனதாக அர்ப்பணிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(யாழ் நியூஸ்)