நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஜனாதிபதி; அதிகாரிகள் கடவுச்சீட்டை முத்திரையிட மறுப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஜனாதிபதி; அதிகாரிகள் கடவுச்சீட்டை முத்திரையிட மறுப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (12) நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, ஜனாதிபதியும் அவரது மனைவியும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் இரவைக் கழித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.

எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏ.எஃப்.பி குறிப்பிட்டுள்ளது.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் இன்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ வானுார்தி நிலைய குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்லமுடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவுக்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.