காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களின் அரசியல் கட்சி பதிவுக்கு மறுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களின் அரசியல் கட்சி பதிவுக்கு மறுப்பு!

புதிய அரசியல் கட்சியை பதிவு செய்யுமாறு காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சியை தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்ய முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று பிற்பகல் ஒரு குழுவினர் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான உரிய கடிதங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

காலக்கெடுவிற்கு பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி உரிய நேரத்தில் மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.