
இன்னும் சில வாரங்களில் ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறையை தயாரிப்பது தொடர்பில் பல வருடங்களாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அனுசரணையுடன் ஓய்வூதிய முறையை உடனடியாக அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு இந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாட்டு நாணய அலகுகளில் பிரீமியத்தை செலுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பணத்தை செலுத்தும் போது எந்தவொரு தொழிலாளி இறந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பிரீமியத்தை செலுத்தி சட்ட உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.