காலி முகத்திடல் போராட்டம் மீதான தாக்குதலின் போது இராணுவத்தினரால் முதலில் தாக்கப்பட்டது பிச்சைக்காரர்கள் என சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர கூறுகையில், போராட்டக் களம் பாரிய பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதாகவும், அங்கு பிச்சைக்காரர்கள் கூட இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் முதலில் அங்கிருந்த பிச்சைக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், இது தற்போதைய அரசாங்கத்தின் மிகவும் கேவலமான தாக்குதல் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)