கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் செயலகத்தையும் போராளிகள் கைப்பற்றியதன் பின்னர், இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களின் அதிகாரம் அங்கேயே முடிந்து விட்டது என்றார்.
69 இலட்சம் பேரால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை வீழ்த்த 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)