
நாட்டின் தற்போதைய கோவிட்-19 நோயின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உள்ளரங்குகள், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது மற்றும் பொதுக் கூட்டங்களில் முகக்கவசங்களை அணிவது மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் பதிவான கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 586 ஆக பதிவைகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)