
கிரிபத்கொட மாயா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.
அன்றைய தினம் கொழும்பு மீரிகமவில் ஓடிக்கொண்டிருந்த மந்தகாமி ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்கொலை செய்துகொண்டவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் உயிரிழந்தவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது தந்தையும் கடிதம் எழுதியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
குறித்த அந்த கடிதம் ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த கடிதத்தின் ஊடாக தனது இறுதிக் கிரியைகளில் மதகுருமார்களை கலந்து கொள்ள வேண்டாம் எனவும், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மதகுருமார்களை வீட்டிற்கு அழைக்க வேண்டாம் எனவும் அவர் தனது உறவினர்களிடம் கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் தனது தந்தை மிகுந்த சோகத்தில் காலத்தை கடத்தியதாக தனது மகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை வெளிநாட்டில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்படுவதாக வெளியான செய்தியால் தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரியிடம் மகள் விளக்கமளித்துள்ளார். (யாழ் நியூஸ்)
உங்கள் வியாபார விளம்பரங்களுக்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்.