
எரிபொருள் விலை குறைப்பினால் பஸ் கட்டணத்தில் குறைப்பு ஏற்படுமா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், போதியளவு டீசல் கிடைத்தால் பரிசீலிக்கலாம் என்றார்.
இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்திடமும் வினவியபோது, தேசிய பஸ் கட்டண கொள்கையின் பிரகாரம் டீசல் விலையில் 4% மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் விலை 20 ரூபாவால் டீசல் குறைக்கப்பட்டதன் அடிப்படையில் 4% விலையில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)