
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவினை பரிந்துரை செய்துள்ளதோடு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை ஆமோதித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினை பரிந்துரை செய்துள்ளதோடு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் அதனை ஆமோதித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை பரிந்துரை செய்துள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார அதனை ஆமோதித்துள்ளார்.
இதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளனர். நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)