
இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் தாம் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாகவும், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதால் விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"அமைச்சகத்தைப் பெறுவதற்குப் பதிலாக, கூடிய விரைவில் விசாரணையை எதிர்கொண்டு எனது பெயரை இதில் இருந்து அழிக்க விரும்புகிறேன்."என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறு இலஞ்சம் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், தான் நிரபராதி என பிரகடனப்படுத்துவதாகவும் திரு.நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)