எ‌ரிபொரு‌ள் வரிசையில் பிடிபட்டால் 50 ஆயிரம் அபராதம்!!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

எ‌ரிபொரு‌ள் வரிசையில் பிடிபட்டால் 50 ஆயிரம் அபராதம்!!

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும். பின்னர் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் இந்த தண்டனையை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் வாகன வாகன சட்ட திருத்தத்திற்கு அமைவாக முதல் தடவையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 15,000 ரூபாய்க்கு குறையாத மற்றும் 20,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும், இதே குற்றச்சாட்டை இரண்டாவது முறை அல்லது அதற்கு மேல் மேற்கொள்ளும் நபருக்கு 30,000 ரூபாய்க்கு குறையாத ஆனால் 50,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

வாகன இலக்கத் தகடுகளுக்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது. 

அந்த சந்தர்ப்பத்தில் சிலர் வாகன இலக்கத் தகடுகளை மாற்றி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்தமை குறித்து சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது. இதனடிப்படையில் இவ்வாறான oru அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.