ஜம்இய்யாவின் புதிய தெரிவு அங்கீகாரமானதே!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஜம்இய்யாவின் புதிய தெரிவு அங்கீகாரமானதே!!

அகில இலங்கை ஜம்யஇயத்துல் உலமாவின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிறைவேற்றுக் குழுவின் தெரிவு நேற்று (18) ஆம் திகதி கண்டியில் நடைபெற்றது.

24 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 பொது சபை உலமாக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் ஜம்இய்யாவின் யாப்புத் திருத்தம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாலை புதிய நிர்வாக தெரிவும் அமைதியாகவும் முறையாகவும் நடைபெற்றது.

ஜனநாயக விழுமியங்கள் பேணி நடைபெற்ற மேற்படி தெரிவில் முதலில் 30 நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்களில் இருந்து மீண்டும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதன் போது இலங்கை முஸ்லிம்களும் உலமாக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மரியாதைக்குரிய முஃப்தீ எம்.ஐ.எம். ரிஸ்வி ஹழ்ரத் அவர்கள் கௌரவ தலைவராகவும் அவர்களுடன் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் கௌர பொருளாளராக கலாநிதி ஏ. அஸ்வர் அஸ்ஹரி அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களுடன் ஏனைய பதவிதாங்குனர்கள் தெரிவும் அதே முறையில் அமைதியாக இடம்பெற்றது.

9000 அங்கத்துவம் பெற்ற உலமாக்களின் பிரதிநிதிகளாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் சகல கிளைகளில் இருந்து கலந்து கொண்ட சுமார் 500 பொது சபை உலமாக்களில் இருந்து 103 மத்திய சபை உறுப்பினர்களில் இருந்தே மேற்படி 30 நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்படி தெரிவின் போது புதிய முகங்களாக மாத்தளை மாவட்ட செயலாளர் அஷ் ஷைக் நாகூர் ளரீஃப், கண்டி மாவட்ட செயலாளர் அஷ் ஷைக் அப்துல் கஃப்பார் தீனி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் அஷ் ஷைக் ரிபாஃ ரஷாதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களும் உலமாக்களும் சிவில் அமைபப்பினரும் மஸ்ஜித்களின் பெடரேஷன்களும் ஆவலுடன் எதிர்பார்திருந்த தலைமைப் பண்பும் ஆற்றலும் நிதானமும் அனுபவமும் மக்கள் செல்வாக்கும் பெற்ற மரியாதைக்குரிய ரிஸ்வி முப்தி ஹழ்ரத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையானது மிகுந்த மனத்திருப்தியை அளிக்கிறது.

அதே வேளையில் உலமாக்களைச் சாராத ஒரு சிலர் மேற்படி ஜனநாயக முறையிலான தெரிவினை விமர்சிக்கலாம்.

 அவர்கள் ஜம்இய்யாவின் நலவையோ முஸ்லிம் சமூகத்தின் நலவையோ கவனத்திற் கொள்ளாது ஏதோ ஒரு அஜண்டாவில் வேலை செய்பவர்கள் என்பது தெளிவான ஓர் இரகசியமாகும் என்பதும் எமக்கு தெரியும். 

எனவே, முறையாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ தலைவர் அவர்களோ, அவர்களுடன் தெரிவான கௌரவ உறுப்பினர்களோ, எவரும் மேற்படி அஜண்டாவின் வேலை செய்பவர்களின் முறையற்ற விமர்சனங்களுக்கு செவிமடுக்காது தொடர்ந்தும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்ய வேண்டும். 

ஒரு போதும் இத்தகைய முறையற்ற வீதி விமர்சனங்களை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்பதுவே உலமாக்களினதும் இலங்கை பொது மக்களினதும் சிவில் அமைப்புக்களினதும் பணிவான வேண்டுகோளாகும்.

முழுத் தெரிவுகின் முடிவுகளும் வெளியாக சுமார் நான்கு மணித்தியாளங்களுக்கு மேலாக சென்றதாக கலந்து கொண்ட உலமாக்கள் தெரிவித்தனர்.

சபையில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளாத எந்த உலமாக்களும் இது சம்பந்தமாக எந்த விமர்சனங்களையும் முன் வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதற்கு எதிரான அணைத்து தடைகளையும் தாண்டி பல்லாண்கு காலம் சமூகத்துக்காய் பயணிக்க அல்லாஹ் அருள் புரிவானா!

-மௌலவி அஸ்மி சித்தீக் (உஸ்வி)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.