ஜெட் எரிபொருள் இறக்குமதியினை தனியார் துறைக்கு வழங்க நடவடிக்கை!
advertise here on top
advertise here on top

ஜெட் எரிபொருள் இறக்குமதியினை தனியார் துறைக்கு வழங்க நடவடிக்கை!

ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜெட் எரிபொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இதுவரையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க டொலர் நெருக்கடியால் நாட்டிற்கு ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஜெட் எரிபொருள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தனியார் துறையை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டால், எரிபொருள் சேமிப்பக ஆபரேட்டர்கள் தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சருக்கு அறிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையில் உள்ள விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.