இரண்டு விக்கட்டுக்களினால் அவுஸ்திரேலியா அணி வெற்றி!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

இரண்டு விக்கட்டுக்களினால் அவுஸ்திரேலியா அணி வெற்றி!

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவஸ்திரேலியா அணி டக்வெத்-லூயிஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தனுஸ்க குணதிலக 55 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்தார்.

பந்து வீச்சில் Marnus Labuschagne மற்றும் Ashton Agar ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து போட்டியை ஆரம்பித்த நடுவர்கள் டக்வெத்-லூயிஸ் முறைப்படி 44 ஓவர்களுக்கு 282 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணிக்கு பெற்றுக் கொண்டுத்தனர்.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 42.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கிளேன் மெக்வெல் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.