
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 31500 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
மறுசீரமைப்பின் போது எந்தவொரு ஊழியர்களும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு கௌரவமான (Golden Shakehand) முறையில் மானியத்துடன் விருப்ப ஓய்வுக்கு முன்மொழியுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கட்டுநாயக்கவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுயாதீன ஊழியர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊழியர்களின் பிரதிநிதிகள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம், ஸ்ரீலங்கன் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம், தரை கையாளுதல் அதிகாரிகள் சங்கம் (Ground Handling), விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (SAATA) உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)