ஞானசார தேரரின் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசார தேரரின் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, தலைமையிலான கலகொட அத்தே ஞானசார தேரர்  செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் பதவி காலம் நிறைவடைந்திருந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது.

13 பேர் கொண்ட இந்த செயலணியின் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்குள் 'ஒரு நாடு, ஒரே சட்டம்' மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டது.

அதன்படி, பொது மக்கள் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவின் கருத்துக்களை இந்த செயலணி பெற்றிருந்தது.

இந்நிலையில், குறித்த செயலணி சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.