
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மக்கள் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்கு மாதாந்தம் எரிபொருளுக்காக 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருளுக்காக 3300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதாந்தம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயு வழங்க 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய தேவையை எதிர்கொண்டு இந்த வருட இறுதிக்குள் எரிபொருட்களின் விலைகள் சுமார் 40 வீதத்தால் அதிகரிக்கும் என ஊகங்கள் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)